இலங்கையின் மீது முழுமையாக நம்பிக்கையை இழந்து விட்ட ஜப்பான்!
நம்பிக்கை இல்லை
இலங்கை மீது ஜப்பான் முழுமையான நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான் குறுகிய கால கடன் வசதியை வழங்க வேண்டுமானால், சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
இல்லையேல், அரசாங்கம் கோரும் கடன் வசதிகளுக்கான உடன்படிக்கைகளில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் கையெழுத்திட மாட்டார்கள் என்று ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கப்பல்
இந்தியக் கடன் ஊடான எரிபொருள் ஏற்றுமதி ஜூன் 17 ஆம் திகதி இலங்கையை வந்தடையும். எனினும் நங்கூரமிடப்பட்டுள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை இலங்கை செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாம் 10ஆம் திகதி மாலை ஜனாதிபதியை சந்தித்தபோது, அவரின் பதவி விலகல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று கூறியபோதும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ள அதிகாரங்களை விட்டுக்கொடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி தயாராக இல்லை எனவும் ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.