நாட்டின் தற்போதை நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கக் கூடிய நபர் குறித்து வெளியான தகவல்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே தீர்வு உண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவிற்கு உலக நாடுகளுடன் சுமூகமான தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் கடும் முரண்பாடான கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இப்போதே சர்வதேச சமூகத்துடன் வலுவான ஒர் வலையமைப்பினை கட்டியெழுப்புக் கொண்டுள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சர்வதேசத்துடன் உரிய முறையில் தொடர்பு பேணவில்லை, உதாரணமாக ஜப்பானை அரசாங்கம் உதைத்து விரட்டியது போன்ற நிலைமை உருவானது என அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.