துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதல் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து ஷின்சோ அபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.