எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தேசிய எண்ணெய் இருப்பை வெளியிட ஜப்பான் பரிசீலனை
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைச் சமாளிக்க, ஜப்பான் தனது தேசிய எண்ணெய் இருப்பிலிருந்து ஒரு பகுதியை வெளியிட ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் சுமார் 95 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
தற்போது ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் பரிசீலனை
இதை ஈடுகட்ட, ஜப்பானிய அரசாங்கம் தனது அவசரக்கால இருப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஜப்பானிடம் தற்போது சுமார் 146 நாட்களுக்குத் தேவையான அவசரக்கால இருப்பு உள்ளது.
இது தவிர, தனியார் நிறுவனங்களின் இருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் இணைந்து பராமரிக்கப்படும் கூட்டு இருப்புகளையும் சேர்த்தால், மொத்தம் 254 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் ஜப்பானிடம் உள்ளது.

முன்னதாக, எண்ணெய் இருப்பை வெளியிடும் திட்டம் ஏதுமில்லை என்று ஜப்பான் தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) மற்றும் பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்தோ அல்லது தனித்தோ இந்த எண்ணெய் இருப்பை வெளியிட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam