தடுப்பூசி குப்பிக்குள் துகள்கள்! அமெரிக்காவின் தடுப்பூசிகளை அதிரடியாக நிறுத்திய ஜப்பான்
அமெரிக்காவின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜப்பான் அதிரடியாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவிட் பாதிப்பு மற்ற நாடுகளை போல ஜப்பானிலும் அதிகமாக உள்ள நிலையில், ஜப்பானில் அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் இதுவரை கோவிட் தடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி போடுவதையும் ஊக்கப்படுத்தாமல் இருந்தது. பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றது.
அந்த வகையில், அமெரிக்காவின் பைசர், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. இவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அதில் ஒரு மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசி மருந்தை நிறுத்தி வைத்து உள்ளது. ஏற்கனவே இந்த மருந்தில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில்,அதுபற்றி ஆய்வு நடத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும்,மாடர்னா தடுப்பூசி செலுத்திய யாருக்கும் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன? என்பது தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா இந்த மருந்தை உற்பத்தி செய்தாலும் ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம் தான் மருந்தை பாட்டிலில் அடைத்து விநியோகிக்கும் பணியை செய்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.