பிரபல வர்த்தகரின் மரணத்திற்கான காரணம்! வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து நெரிக்கப்பட்டமையே, அவரது மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரியினால் இந்த பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட கொலை
இதேவேளை, பொரள்ளை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர், தனது காரில் தனியாகவே வருகைத் தந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டு, மிகவும் சூட்சமமாக இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! காரின் பயணப்பாதை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |
கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் மரணம்! விசாரணைகள் தீவிரம் |
