வன்னியில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனசெத பெரமுன
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலாவது வேட்புமனுவை ஜனசெத பெரமுன கட்சி தாக்கல் செய்துள்ளது.
குறித்த வேட்புமனு இன்று (04.10.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் ஆதரவாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், "முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இனத்திற்கே சேவை செய்கிறார்கள்.
நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனசெத பெரமுன கட்சி வடக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றது.
இன, மத பேதமின்றி மக்களின் பிரச்சரனைகளை தீர்ப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. வன்னியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்கள் இன, மதம் பார்க்காது அனைவருக்கும் உதவி செய்கிறார்கள்.
அது போல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானால் அவர்களும் இன, மத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்கிறார்கள். ஆனால், முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானால் அவர்கள் தமது இனத்திற்கு மட்டுமே சேவை செய்கிறார்கள்.
ஆனால் நாம் வந்தால் வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பாராது அனைத்து இன மக்களையும் ஒன்றிணைந்து அவர்களுக்கு இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
