மகிந்த ராஜபக்சவே ஜானகியை இலங்கைக்கு அழைத்து வந்தார்:மறைக்கப்பட்டுள்ள பல உண்மைகள் அம்பலம்.....
கிரிஷ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவை முதன் முதலில் இலங்கைக்கு அழைத்து வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஆவார்.
அவர் தான் ஜானகியுடன் முதன் முதலில் சில கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர். ஜானகி இரு வெளிநாட்டு வேலைகளைச் செய்துள்ளார்.
ஒன்று மத்திய கிழக்கில் ஒரு விமான சேவை நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். இன்னொன்று அவுஸ்திரேலியாவில் பல் பொருள் அங்காடிகளில் வேலை செய்ததாகக் கூறுகிறார்.
காலில் சங்கிலியை கட்டி அடைத்து வைத்திருந்தனர்! முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த பல திடுக்கிடும் தகவல்கள்...
கடாபியிடம் என்ன செய்தார் ஜானகி
முக்கியமாக மத்திய கிழக்கு விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு ஷேக்குகள் அதாவது மத்திய கிழக்கை ஆட்சி செய்யும் ராஜ குடும்பங்களைச் சேர்ந்த சிலர் அறிமுகமாகியுள்ளனர்.
அந்த அறிமுகத்தின் மூலம் லிபியாவின் ஆட்சியாளராக இருந்த முஅம்மர் கடாபியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதன் பின் அவர் கடாபியிடம் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
அவர் அங்கு பணியாற்றிய காலத்தில்தான் மகிந்த ராஜபக்ச லிபியாவிற்குச் செல்கிறார். அப்போது மகிந்த ராஜபக்சவிற்கு 'கடாபியிடம் இலங்கைப் பெண் ஒருவர் இருக்கிறார்' என்று தெரியவருகிறது.
உண்மையில் ஜானகி அங்கு மோசமான பணியையே செய்துள்ளார். ஆனால் மகிந்தவிடம் ஜானகி சர்வதேச உறவுகளைக் கையாள்வதாக ஒரு கதையைக் கூறியுள்ளார்.

அப்படித்தான் மகிந்தவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் மகிந்த இவரது தொடர்பை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். அதன் பிறகு மஹிந்த கடாபியிடம் பேசி இவரை இலங்கைக்கு வரவழைத்தார்.
கடாபி தனது சொந்த ஜெட் விமானத்திலேயே ஜானகியை இலங்கைக்கு அனுப்புகிறார். அந்த அளவிற்கு நெருங்கிய தொடர்பு அங்கு இருந்திருக்கிறது.
அதன் பின்னர் அந்த தொடர்புகளின் பலனாகவே அவருக்கு கொழும்பின் மையப்பகுதியில் 4.3 ஏக்கர் நிலம் மகிந்தவால் வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் 2010 - 2011 காலப்பகுதியில் அவருக்கு இருந்த சர்வதேச தொடர்புகள் மற்றும் அவர் உருவாக்கிய வலையமைப்பின் மூலமே கிரிஷ் திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அமித் கட்யாலின் நிறுவனமே பொறுப்பேற்கிறது .
அமித் கட்யால் இந்தியாவில் செய்த மோசடி
இவரை இலங்கைக்குக் கொண்டுவந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போதுஇ இந்த நிறுவனம் இந்தியாவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது.
அமித் கட்யால் 'குருகிராம்' திட்டத்தில் 2 பில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்து கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அத்தகைய கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளரையே ஜானகி கொழும்பின் மையப்பகுதியில் இந்தத் திட்டத்திற்காகக் கொண்டு வருகிறார்.
கிரிஷ் என்ற பெயரில் வரவில்லை. இந்தியாவில் கறுப்புப் பட்டியலில் இருந்ததால் வேறு பெயரில்தான் வந்தது. குருகிராம் என்ற சொகுசு வீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 2 பில்லியன் இந்திய ரூபாயை மோசடி செய்து 7 ஆண்டுகளாகப் பணம் பெற்று வீடுகளைக் கொடுக்காமல் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது ஒரு BOI திட்டம். இவர்கள் உண்மையில் 'மேரியட்' மற்றும் 'ரிட்ஸ் கார்டன்' ஆகிய சர்வதேச நாமங்களின் கீழ் ஹோட்டல்கள் மற்றும் சொகுசு வீடுகள் கட்டும் திட்டமாகவே இதைத் தொடங்கினர்.
2012 காலப்பகுதியில் காணியை கையகப்படுத்த நீண்ட காலம் எடுத்தது. அக்காலத்தில் இந்த வேலைகளை விரைவுபடுத்த நாமல் ராஜபக்சவிற்கும் ஒரு தொகை பணம் செலுத்தப்பட்டது.
தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உங்களுக்குத் தேவையானதைச் செய்து தருகிறேன் அதற்கு எனக்கு இவ்வளவு தொகையைக் கொடுங்கள் என்று அமித் காட்யாலிடம் 7 கோடி ரூபாய் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.