தமிழகத்தில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 01ஆம் திகதியான இன்று (14) கோலாகலமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இது இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தமிழர் தேசிய விழாவாக உள்ளதோடு, பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு, இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவனியாபுரத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டின் நேரலை கீழே தொடுக்கப்பட்டுள்ளது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |