இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
புதிய இணைப்பு
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று அதிகாலை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையம் வழியாக ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஜனாதிபதியுடன் தூதுக்குழு
இந்தப் பயணத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
