மோடி விடயத்தில் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்: சர்ச்சையாகும் கச்சதீவு விவகாரம்

Jaishankar Indian fishermen Sri Lanka Kachchatheevu
By Dharu Apr 02, 2024 05:33 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) விவகாரத்தில் திமுகவின்(DMK) இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(Jaishankar) கச்சதீவு(Kachchatheevu) விவகாரம் தொடர்பில் விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வர்.ஸ்டாலினுக்கு(M. K. Stalin) நான் 21 முறை கச்சதீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன் என்றும் இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல." எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கச்சதீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலுக்கு அமைய கச்சதீவு விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கச்சதீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம்

கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம்

கடற்றொழிலாளர்கள் உரிமை

இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974ஆம் ஆண்டு விளக்கம் தரப்பட்டுள்ளது.

jaishankar-blames-kachchadivu-problem-dmk

மேலும் அப்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும் சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன்.

அதேவேளை இந்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த கடற்றொழில் புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன'” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்படி தெரிவித்த இரண்டே ஆண்டுகளில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவு கடல் பகுதியில் தொழில் செய்ய தடை செய்தனர்.

கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலின் தரப்பை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்

கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலின் தரப்பை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன் 'இலங்கையின் இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் கடற்றொழில் கப்பல்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யக்கூடாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவு கடந்த 20 ஆண்டுகளில் 184 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 175 இந்திய படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.

jaishankar-blames-kachchadivu-problem-dmk

கச்சதீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சதீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை.

கச்சதீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது.

இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம்.

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைகள் பற்றி அரசாங்கம் தகவல் வெளியிட வேண்டும்: சஜித் ரணிலிடம் கோரிக்கை

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைகள் பற்றி அரசாங்கம் தகவல் வெளியிட வேண்டும்: சஜித் ரணிலிடம் கோரிக்கை

கச்சதீவு புறக்கணிப்பு

முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சதீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை.

மே 1961ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு “இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

jaishankar-blames-kachchadivu-problem-dmk

இது போன்ற விடயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.” என்று ஒரு முறை கூறியுள்ளார்.

இதிலிருந்து நேரு இந்த தீவை ஒரு தொல்லையாகப் பார்த்தார் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த தீவை எவ்வளவு சீக்கிரம் தாரை வார்க்க முடியமா அவ்வளவு நல்லது என்பதே நேருவின் பார்வையாக இருந்துள்ளது.

இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது. பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி கச்சதீவை ஒரு சிறிய பாறை என்று அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த புறக்கணிப்பு மனப்பான்மையே கச்சத்தீவு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான காங்கிரஸின் தற்போதைய அணுகுமுறையாகும்" என்றார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US