அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை இடைநிறுத்திய ஜாகுவார் லேண்ட் ரோவர்!
பிரித்தானியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் (JLR), ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியைத் தொடர்ந்து(25%) இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் இந்தியாவின் டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான கோவென்ட்ரியை தளமாகக் கொண்டமைந்துள்ளன.
கார்களின் விலை
குறித்த வரியால் கார்களின் விலைகளில் ஏற்படப்போகும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் அதிகரித்த செலவுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பது குறித்தும் முடிவுக்கு வந்தபிறகே இந்த ஏற்றுமதி தொடரப்படும் என நம்பப்படுகிறது.
அமெரிக்க சந்தையில் அதன் வருடாந்திர வாகன விற்பனையில்(430,000 கார்கள்) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்ட குறித்த நிறுவனங்கள் கொண்டுள்ளன.
இதன்படி, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் உற்பத்திகள் ஏற்கனவே அமெரிக்க பங்குச்சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
இருப்பினும், ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அதன் விலை நிர்ணயம் மற்றும் விநியோகச் சங்கிலி உத்திகளை மறு மதிப்பீடு செய்ய நிறுவனம் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவுக்கான 25% பரஸ்பர இறக்குமதி வரி என்பது உள்நாட்டு கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அமெரிக்க நிர்வாகத்தின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.
இந்த நிலை டாடா மோட்டார்ஸ் போன்ற வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கியுள்ளது.
ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்
ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்க்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தையாகும். இது மார்ச் 2024 வரையிலான ஆண்டில் 6.5யூரோ பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது .
இதன் காரணமாக இலாபம் மற்றும் போட்டித்தன்மையை ஆராயும்போது வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருக்களாம் என கூறப்படுகிறது.
ஜனவரி 2025 இல், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் முதல் காலாண்டு லாபத்தில் 17 சரிவைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதற்கு நாணய ஏற்ற இறக்கங்கள் ஓரளவு காரணமாக இருந்தன.
சுமார் 200,000 பேரை வேலைக்கு அமர்த்தும் இங்கிலாந்து வாகனத் துறை, ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிறகு அதன் இரண்டாவது பெரிய சந்தையான அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது .
மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) கூற்றுப்படி , 2024 ஆம் ஆண்டில் 7.6 யூரோ பில்லியன் மதிப்புள்ள பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட கார்களில் 20% அமெரிக்கா பெறுகிறது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் மதாதிரம் சுமார் 38,000 வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன.
கார் உற்பத்தியாளர்கள் மீதான சுமையைக் குறைக்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அழுத்தத்தில் இங்கிலாந்து அரசாங்கம் உள்ளது .
நீண்டகால அணுகுமுறை
இதற்கிடையில், இலாபத்தைப் பேணுவதற்கும் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் மதிப்பீடு மிக முக்கியமானதாக இருக்கும்.
கட்டணம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான உத்தியை உருவாக்க, ஒரு மாத கால இடைநிறுத்தத்தை பயன்படுத்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
மதிப்பீடு முடிந்ததும் நிறுவனம் அதன் நீண்டகால அணுகுமுறையை அறிவிக்கும் என்று தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு ஜாகுவார் லேண்ட் ரோவரின் இடைநிறுத்தம், ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகள் இங்கிலாந்து கார் துறையில் ஏற்படுத்தும் அதிர்வு விளைவுகளை எடுத்துக்காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |