யாழில் நண்பியை மிரட்ட இளைஞன் செய்த விபரீத செயல்!
யாழில் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், தான் தங்கியிருக்கும் அறையில் கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார்.
எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளார்.
இதன்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
