யாழ். இளைஞர்களின் கதிர்காமப் பாதயாத்திரை - கிளிநொச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி, ஆன்மீகப் பாதயாத்திரை மேற்கொண்ட இளைஞர்கள் கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீகப் பாதயாத்திரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று(08.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
அமோக வரவேற்பளித்த கிளிநொச்சி மக்கள்
இதனைத் தொடர்ந்து, பயணித்த யாத்திரீகர்கள், காலை 11:00 மணியளவில் பச்சிளைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தடைந்துள்ளனர்.

அங்கு அவர்களுக்குப் பச்சிளைப்பள்ளி பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
அதன் பின்னர், கிளிநொச்சி மாவட்ட எல்லையை அடைந்ததும், மாவட்ட மக்களின் பாரியளவிலான வரவேற்புடன் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர், பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முக்கிய அதிகாரிகள், பச்சிளைப்பள்ளி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam