நள்ளிரவில் நடந்த கோர விபத்து - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாழ். இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(05.06.2026) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
21 வயது இளைஞர் உயிரிழப்பு
இதன்போது, டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்த நிலையில், 21 வயதுடைய புத்தூர் கிழக்கை சேர்ந்த வாசன் காஜானன் அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


மேலதிக தகவல் - தீபன்
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri