யாழ். வருகின்றார் நாமல்! நாளை தொடக்கம் தடுப்பூசி 61 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்

corona virus jaffna covid 19 corona vaccine namal rajapaksa
By Rakesh May 29, 2021 01:08 PM GMT
Report

 யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை 61கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ். வருகின்றார்.

கோவிட் நோய்த் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கலில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்பான முன்னேற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 8 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை ஒரு அமர்வும், அதன் பின்னர் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு அமர்வும் நடைபெறவுள்ளது.

அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களால் தங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என உறுதிப்படுத்தினால் மாத்திரமே தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

எனவே, நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல முடியும்" - என்றார்.

கோவிட் தடுப்பூசி ஏற்றலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை வருமாறு:-

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 16 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 13 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 4 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 10 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 2 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் நாளை கோவிட் தடுப்பூசி முதற்கட்டமாக ஏற்றப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US