யாழ்.வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்: பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு நேற்று(06.03.2024)கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியோர் இல்லம்
இந்நிலையில், வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதியோர் இல்லம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan