தையிட்டியில் விவகாரம்: தீர்மானத்தை பார்த்து பரிசீலிப்பதாக டக்ளஸ் தெரிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம் (31.05.2023) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் பிழையானது தான். ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவோம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விகாரை அமைக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறினார்கள்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |