யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு

Sri Lanka Politician University of Jaffna SL Protest Sri Lankan political crisis
By Theepan Jan 24, 2023 05:21 PM GMT
Report

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளனர்.

மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (24.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு | Jaffna University Student Union Organizing Protest

இன அழிப்பு நடவடிக்கைகள்

இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,  

ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.

தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு | Jaffna University Student Union Organizing Protest

போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழ் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவில்லை.

சர்வதேசத்தை அரசு ஏமாற்றி வருகிறது

தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு | Jaffna University Student Union Organizing Protest

தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதி வழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.

பாரிய மக்கள் எழுச்சி பேரணி

அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு | Jaffna University Student Union Organizing Protest

எமது உரிமைகளை நாம் விடடுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும்.

ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு | Jaffna University Student Union Organizing Protest

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US