யாழ் பல்கலைக்கழகத்தின் சொட்டு நீர்ப்பாசன மரக்கறி செய்கை வெற்றி
யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினால் நவீன தொழில்நுட்ப முறையிலான சொட்டு நீர்ப்பாசன மூலம் மேற்கொள்ளப்பட்ட கத்தரி பயிர்ச்செய்கை நல்ல விளைச்சலை கண்டு வெற்றியளித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய மேம்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணி உரிமையாளர் ஒருவருக்கு சுமார் மூன்று லட்சம் பெறுமதியான சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கி அவற்றினூடாக கத்தரி பயிர் செய்கை மேற்கொண்டு அவற்றின் அறுவடை விழா நேற்று(24) இடம்பெற்றுள்ளது.
அறுவடை விழா
இந்த அறுவடை விழாவிற்கு பிரதம அதிதியாக வடமாகணத்தின் பிரதமர் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து கொண்டுள்ளார்.
மேலைத்தேய நாடுகளில் குறைந்த நீரில் விவசாயத்தை மேற்கொண்டு வருவதைப் போன்று இத்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய நிலையில் அது வெற்றியடைந்துள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் ச.முரளிதரன், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ந.சுதாகரன், வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் செ.சுகந்தினி, யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்தின் பீடாதிபதி , விவசாயிகள் விவசாய பீடத்தின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
