யாழ். பல்கலைக்கழகத்தின் இறுதிநாள் பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பின் இறுதிநாள் பட்டமளிப்பு விழாவானது இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த பட்டமளிப்பு விழா தொடர்ச்சியாக நான்கு தினங்களாக இடம்பெற்று வருகிறது.
பட்டங்கள் வழங்கி வைப்பு
இந்த முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகைமை சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்துடன், மருத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும், முகாமைத்துவ பீடத்தில் ஒருவர் ஏழு தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதுடன், விழிப்புலனற்ற இருவர் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.






வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam