யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவிப்பு

Jaffna University of Jaffna
By Theepan Feb 18, 2026 09:23 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

பட்டமளிப்பு விழா

 இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு நேற்று திங்கட்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவிப்பு | Jaffna University Convocation Ceremony 2026

இதன் போது முன்னாள் கலைப்பீடாதியும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவருமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றி விளக்கமளித்தார்.அங்கு அவர் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு,


இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவிப்பு | Jaffna University Convocation Ceremony 2026 

இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், வழங்கப்பட இருப்பதுடன், ஒருவர் வியாபார நிர்வாகத்தில் சான்றிதழையும் பெற இருக்கின்றார்.

பரிசில்கள் விபரம்

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 376 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் வவுனியா வளாகத்தின் மாணவர்களும் பட்டம் பெற உள்ளனர்

மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 94 தங்கப்பதக்கங்களும், 69 பரிசில்களும், 15 புலமைப்பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவிப்பு | Jaffna University Convocation Ceremony 2026

இப்பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை பங்குனி மாதம் 5ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை அன்றே பிற்பகல் 4.00 மணிக்கும் இடம்பெறவிருக்கின்றது. சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொடர்பியல் துறையின் ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப்; பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் குழந்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த இருக்கைப் பேராசிரியர்; கீதாஞ்சலி சத்தியதாஸ் “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பிலும் நிகழ்த்தவிருக்கின்றனர்.

இந்நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இனிதே நிறைவு பெறும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US