பொன்விழா காணும் யாழ். பல்கலைக்கழகம்: பிரித்தானியாவில் சிறப்பு நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான நிகழ்வு லங்காசிறி, தமிழ்வின் ஊடக அனுசரனையில் குறித்த பல்கலைக்கழகப் பழைய மாணவர்களால் நடாத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வானது, நவம்பர் 30ஆம் நாள் லண்டன் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் (SLOUGH) என்னும் இடத்திலுள்ள (CRYSTAL GRAND HALL, 3, BATH ROAD SL1 3UA) மண்டபத்தில் பொன் விழா சிறப்புற நிகழவுள்ளது.
1974. 08. 01 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ். வளாகம் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர், 1974.10.06 அன்று அன்றைய இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
1978ல் ஏற்பட்ட சட்ட மாற்றத்தினால் 1979.01.01 அன்று இலங்கையின் தன்னாதிக்கமுள்ள 6ஆவது பல்கலைக்கழகமாக யாழ். பல்கலைக்கழகம் உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 13 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam