தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக டக்ளஸ்: யாழ். பல்கலை துணைவேந்தர் புகழாரம்
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் என தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீ பற்கணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரம்
அவர் மேலும் கூறுகையில்,
"இன்றுள்ள அரசியல்வாதிகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறுபட்டவராகவே இருக்கின்றார்.
அவர் மக்களுக்கான தேவைப்பாடை அறிந்து அவர்களது நலன்கள், எதிர்காலம் மற்றும் பொருளாதாரம் என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டும் அல்லது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே அதிக கரிசனையானவராக இருக்கின்றார்.
அந்தவகையில் தமிழ் மக்கள் இவ்வாறான ஒருவரை மிகவும் நேசிப்பவர்களா இருக்க
வேண்டும்.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதற்கான பல்வேறு முயற்சிகளை குறிப்பாக எவ்வாறான தடைகள் இருந்தபோதிலும் அதன் உச்சிவரை சென்ற அவற்றை உடைத்து வெற்றிபெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இதற்கு சான்றாக கிளிநொச்சி அறிவியல் நகரும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் சான்று பகர்கின்றன.
அத்துடன் பின்தங்கிள் கிராமங்களின் விளையாட்டுத்துறை கல்வி அகியவற்றில் மட்டுமல்லாது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதை பார்க்க முடிகின்றது. அதேவேளை அமைச்சரின் அரசியல் சாணக்கியத்தினூடாக தொழி்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றன.
அதேபோன்று எதிர்காலத்திலும் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக காணப்படுகின்றார்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 20 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
