கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையறையின்றி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது, இன்று (22.02.2024) மதியம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை கடிதம்
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் இன்று நண்பகலுக்குள் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் காலவரையறையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
