நட்டத்தை சந்தித்துள்ள நிலக்கடலை உற்பத்தி: நிர்க்கதியில் மட்டக்களப்பு விவசாயிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கச்சான், உளுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது பொருட்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு - பதுளை வீதியில் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது நிலக்கடலைகளை இம்முறை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் நிலக்கடலை உற்பத்தியில் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.
இம்முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதோடு மிஞ்சிய சில பகுதிகளில் அறுவடை செய்த நிலக்கடலைகளுக்கு உரிய விலை இல்லாததால் தங்களுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வந்த தனியார் கம்பெனிகள் 600 ரூபாய் கொடுத்து தங்களது நிலக்கடலைகளை கொள்வனவு செய்ததாகவு இம்முறை தனியார் கம்பெனிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிலக்கடலைகளை இறக்குமதி செய்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை கொள்வனவில் தனியார் கம்பெனிகள் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |