யாழ். பல்கலை மாணவர்களின் வாகன சுத்திகரிப்பு நிகழ்வும் உணவுத்திருவிழாவும்
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால் வாகன சுத்திகரிப்பு நிகழ்வு ஒன்றும் உணவுத்திருவிழா ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (31.01.2024), யாழ். பல்கலைக்கழக பிரதான வாயில் வளாகத்தில் நிதி சேகரிப்பதற்காக இடம்பெற்றுள்ளது.
வருடந்தோறும் மாணவர்களின் கலைத்திறமைகளையும் விளையாட்டுத்திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் முகமாக மாணவர்களினால் இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வணிக பீட மாணவர்கள்
அந்த வகையில், இந்த வருடமும் மிகவும் சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும் உணவுத்திருவிழாவும் நடைபெற்று முடிந்துள்ளது.
முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்களினால் இந்த வாகன சுத்திகரிப்பு நிகழ்வு மூன்றாவது முறையாகவும் உணவுத்திருவிழா முதல் முறையாகவும் நடாத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா, முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மரக்கன்றுகள் வழங்கிவைப்பு
மேலும், இவ்வருடமும் நிதி சேகரிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிதியானது இயலாதவர்களுக்கு நன்கொடையளிப்பதற்கும் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமுதாய சமையலறைக்கு (Community Kitchen) நன்கொடையளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
அத்துடன், இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையே ஒற்றுமையையும் சமூகப்பொறுப்பையும் கட்டியெழுப்புவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.
அதுமட்டுமன்றி, இந்நிகழ்வில் சமூக நலன் கருதி நிதிப்பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாணவர்களால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
