வடக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்: கண்டனம் வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Sri Lankan Tamils Vavuniya Ranil Wickremesinghe University of Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Jan 12, 2024 06:48 AM GMT
Report

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது, அதற்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமை அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் (11.01.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது, அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்றா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டும்: அமைச்சர் டயனா கமகே

ஜனாதிபதிக்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டும்: அமைச்சர் டயனா கமகே

உரிமைகளை அடக்கும் செயற்பாடுகள்

அனைத்துலகச் சமூகத்தின் முன்னால் சனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு, அறவழியில் போராடிய மக்களின் உரிமையினை பொருட்படுத்தாது, அவர்களை அடக்கியொடுக்குவதற்கு முயலும் இந்த இலங்கை அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னால் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும். 

வடக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்: கண்டனம் வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் | Jaffna Uni Against Protesters Arrests In North

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான பதிலொன்றைக் கூறுவதற்கு இயலாத அரசு, அவற்றுக்காக போராடும் உறவுகளை இன்று வரையில் வீதியில் விட்டுள்ளதோடு, அவர்களுக்கான நீதியையும் மறுத்து வருகின்றது.  

இந்நிலையில், தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த கதிக்கு பதில் கோரி அற வழியில் போராடும் உறவுகளின் உரிமையினையும் கருத்துரிமையினையும் அடக்கியொடுக்கும் செயற்பாடாகவே ஜெனிற்றாவின் கைது நோக்கப்பட வேண்டியுள்ளது.  

நவீன அடிமைத்தன்மை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக குரல் கொடுத்துவரும் இன்னபிற செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்களை புலனாய்வுப்பிரிவினர் உள்ளிட்ட அரச படைகள் அச்சறுத்தும் போக்கும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே!

வடக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்: கண்டனம் வெளியிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் | Jaffna Uni Against Protesters Arrests In North

இதுபோன்ற அப்பட்டமான சனநாயக மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசு, உதட்டளவில் நல்லிணக்கம் பேசும் செயல்களில் ஈடுபடாமல், உளச்சுத்தியுடன் நிலையான நல்லிணக்கத்தினை எட்டுவதற்கு முயல வேண்டும்.

தமிழ் மக்களை ஓரவஞ்சனையுடன் வஞ்சித்து விட்டு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை மேற்கொள்வதென்பது 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவில் அடிமைத்தனத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகும். 

முடிவுக்கு வராத இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் போட்டி

முடிவுக்கு வராத இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் போட்டி

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US