இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

Sri Lankan Tamils Sri Lanka Economic Crisis Tamil nadu Sri Lanka Singapore
By Dev Jan 12, 2024 04:07 AM GMT
Report

இலங்கையில் இனம், மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு தீர்வுகளை காணுமாறு சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ, அன்றைய இலங்கை பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தனவிடம் வலியுறுத்தியிருந்ததாக திமுக ஆதரவாளர் மா.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை அரசாங்கம் அதனை செயற்படுத்தாது, மாறாக இனம், மதம் மற்றும் அரசியல் முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தியமையே இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள விளைவுக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக இருந்தன.

இந்தியாவிடம் மீண்டும் ஆயுதம் கேட்ட சாணக்கியன்

இந்தியாவிடம் மீண்டும் ஆயுதம் கேட்ட சாணக்கியன்

தமிழக அரசியல் கருத்துக்கள்

அன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் வெற்றிபெற்றிருந்தால், தமிழர்கள் என்ற வகையில் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..! | Advice Given By The Pm Of Singapore To Sri Lanka

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியபோது, மேலும் பல விமானங்கள் அவர்களிடம் இருக்கலாம் என்ற எண்ணமே தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருந்தது.

எனினும் எதிரியான இலங்கை அரசாங்கம், சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் நிலையில் அதன் பலத்தை குறை மதிப்பீடு செய்தமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்விக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..! | Advice Given By The Pm Of Singapore To Sri Lanka

இந்தநிலையில், அந்த அமைப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் குறிப்பாக சீமான் போன்றவர்கள் கூறுகின்ற கருத்துக்கள், பொய்யானவை மற்றும் நடைமுறை சாத்தியமற்றவையாகும்.

திராவிட முன்னேற்றக்கழகமும் தமிழீழ விடுதலைப்புலிகளும்

சீமானை விட கோபாலசுவாமி மற்றும் கொளத்தூர் மணி மதுரை நெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர்.

எனினும் அவர்கள் கூட சீமானைப் போன்று விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..! | Advice Given By The Pm Of Singapore To Sri Lanka

இந்தநிலையில் பிரபாகரனை தலைவராக கூறிக்கொண்டு தாம் ஆட்சிக்கு வந்தால், கச்சதீவை மீட்டு வருவேன் என்பது போன்ற விடயங்களை சீமான் கூறுவது, ஒரு மாநில அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரங்களை பற்றி தெரியாத நிலையில் கூறும் கருத்துக்களாகும்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தனிப்பட்ட ரீதியாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாரிய உதவிகளை செய்து வந்தார். அதிலும் பொருளுதவிகளை செய்து வந்தார்.

தமிழக கட்சிகளின் நிலைப்பாடு

இதன் காரணமாக இயல்பாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் எதிரானது என்ற கருத்துக்கள் நிலவின.

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..! | Advice Given By The Pm Of Singapore To Sri Lanka

அதேநேரம், திராவிட முன்னேற்றக்கழகம், தமிழீழ விடுதலைப்புலிகளை தவிர்ந்த ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தபோதும், அந்த அமைப்புக்களுக்கு பெரிதாக உதவிகளை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.  

எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதா, இலங்கையின் தமிழ் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தபோதும் இறுதிக்காலக்கட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்தார் என மா.அன்பழகன் மேலும் கூறியுள்ளார்.

யாழில் 37 வருடங்களின் பின் மீளுருவாகியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்

யாழில் 37 வருடங்களின் பின் மீளுருவாகியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்

மகிந்தவை நேரில் சந்தித்த புதிய இந்தியத் தூதுவர்

மகிந்தவை நேரில் சந்தித்த புதிய இந்தியத் தூதுவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US