மீண்டும் இன்று தோற்கடிப்படுவாரா ஆர்னோல்ட்..! (video)
யாழ். மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (13.02.2023) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ். மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தொடுத்துள்ள மனு மீதான விசாரணை நேற்று (13.02.2023) இரண்டாம் தடவையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்றம்,மார்ச் 7ஆம்
திகதி வழக்கு தொடர்பாக இடைக்கால கட்டளையிடவுள்ளது.
இதையடுத்து மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (14.02.2023) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம்
இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா?, ஆர்னோல்ட் மீண்டும் தோற்கடிக்கப்படுவாரா? என்கின்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
