யாழில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - அரியாலையில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியை சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வியாபார நோக்கமாக துவிச்சக்கரவண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்றபொழுது பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
குறித்த வயோதிபர் கண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையில் கடவையை கடக்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
