யாழில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி
பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின்
தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் ஒரு பிள்ளை கனடாவிலும், மற்றைய பிள்ளை இந்தியாவிலும் வசித்து வருகின்றனர்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில் குறித்த நபர் இன்று மாலை, சுன்னாகம் - மயிலனி பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு நடந்து சென்ற போது, சுன்னாகம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை தொடருந்து மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
