காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான படகு சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்றையதினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மீள ஆரம்பிக்கப்படும் திகதி
காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் இன்றையதினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் காலநிலை சீரின்மை காரணமாக இன்றையதினம் கப்பல் சேவை இடம்பெறாது என்றும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
