காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை குறித்து புதிய தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் வடமாகாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் படகுச் சேவையை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு படகும் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயணிகள் முனையம்
தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இந்த படகுச் சேவையை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக கால்வாய் தூர்வாரப்பட்டு பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது.
இந்த படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அது இலங்கைத் தமிழர்கள் உட்பட இலங்கையர்களின் கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |