இந்திய அரசுடனான மோதல் உக்கிரம்: கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்
அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு - கஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கனடா அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
மக்களுக்கான பயண அறிவுறுத்தல்
இதனைத் தொடர்ந்து இந்தியா - கனடா இடையிலான உறவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனடா அரசாங்கம் தனது மக்களுக்கான பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது.
கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
அமெரிக்கா கவலை
இதைத்தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு பதிலடியாக கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.
கனடாவின் முடிவால் அமெரிக்கா அதிருப்தி இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.