முல்லைத்தீவில் அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் ஏற்பட்ட முரண்பாடு! மக்கள் விசனம்
முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் தனியார் போக்குவரத்து சாரதிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அரச ஊழியர்களினால் நேரத்திற்கு கடமைக்கு செல்ல முடியபத நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்காக போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று காலை 7.30 மணியளவில் பரந்தன் சந்தியில் கிளிநொச்சி சாலை பேருந்து சேவையினருக்கும், குறித்த பேருந்து சேவையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் இன்று தனியார் பேருந்து சேவையினருக்கும், குறித்த சேவையினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பேருந்து சேவையினர், பொலிஸாரால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
குறித்த பேருந்தில் பயணித்த மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கடமைக்கு செல்லாது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காலை 10.30 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றதுடன், போக்குவரத்து துறைசார் அதிகாரிகளுடன் இணைத்து பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரூபன் சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். தமது சேவை முறையாக இடம்பெறும் நிலையில், இந்த புதிய சேவை இடையூறு ஏற்படுத்துவதாகவும், இது நேர அட்டவணையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள்
விசனம் வெளியிட்டதுடன், அனுமதிப் பத்திரம் இன்றி மேற்கொள்ளப்படும் சேவை
தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
