யாழ். சாவகச்சேரியில் வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி உப்புகேணி கிராமத்தில் வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 50இற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் (01.12.2024) நேரில் ஆய்வு செய்தார்.
நீர் ஓடுவதற்கான வழிவகைகள்
இதன் போது வெள்ளமானது இயற்கையாக ஓடுவதற்கான வழிவகைகள் தடைப்பட்டுள்ளதனால் அதனை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினை ஆராய்ந்து வெள்ள நீரை தற்காலிகமாக தண்ணீர் பம்புகள் ஊடாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் விரைவில் கூட்டத்தினை நடாத்தி நிரந்தர தீர்வு காணலாம் என அப் பகுதி பொது மக்களிடம் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |