வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி! (Photo)
வடக்கில் துயிலுமில்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மாவீரர்களுக்கு அஞ்சலிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கு அஞ்சலி
பருத்தித்துறையில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று (21.11.2022) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றி வைத்துடன் மாவீரர்களுக்கு அக வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றிலிருந்து எதிர்வரும் 27ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
செய்தி: தீபன்
சிரமதான பணி
நேற்று (20.11.2022) நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை கண்டலடி துயிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்
அவர்களும் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் போது கருத்து தெரிவிக்கையில்,
அவர் மக்கள் இவ் சிரமதான பணியில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பச்சைக் கொடி ஒன்றினை காட்டியுள்ளனர். இருந்த போதிலும் எமக்கான உரிமைகளில் இதுவும் ஒன்று எமது அரசியல் உரிமைக்காக எமது விடுதலைக்காக போராடியவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூறும் இவ் நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் எவரிடமும் அனுமதி கூறி செயல்படுத்தும் நிகழ்வாக இருக்ககூடாது. என்று தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பொது மக்கள் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாட்டி மாவீரர் துயிலுமில்லம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியல் பிரமுகர்கள், மாவீரர்களின் உறவினர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழகம்
மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பித்து வைப்பு
மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத் துப்பரவு பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டிருந்தார்.
தொடர்ந்து இவ்வாரம் முழுவதும் இவ் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மாவீரா்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு!
மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 21.11.2022 இன்றைய தினம் பளை பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை நகரத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் (21.11.2022 ) இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட
விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு
தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
யாழ்.மாநகர சபையின் அனுமதி
தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ்.மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்
கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கட்சி பேதமின்றி வழமை போன்று முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் தின நிகழ்வு முன்னெடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின முன்னேற்பாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் வழமை போன்று மாவீரர் தின ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வழமையாக முன்னாள் போராளிகளின் ஒழுங்கமைப்பின் கீழ் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தினால் தடைகள் ஏற்படுத்தப்பட்டமையால் எங்களால் இதனைச் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போதைய நிலைiயில் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றமையால் எமது உறவுகளுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை உணர்வுபூர்வமாக மேற்கொள்ள முடியும்.
இதனை நாங்கள் அனைத்து மாவீரர் குடும்பங்களுக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும். மாவீரர் தின ஏற்பாடுகளுக்காக மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணிகளை கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றார்கள். ஆனால் நாங்கள் வழமை போன்று இதனை முன்னாள் போராளிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம்.
இது மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரின், அனைத்து மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். எதிர்வரும் 27ம் திகதி மிகவும் எழுச்சியுடன் இந்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b04402b6-16d1-4faf-9563-653e1d671f8b/22-637b21c978a3e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1bb0cb47-ac3d-4e8d-ba13-8871b8fab7c6/22-637b21c9b7ef2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/64ed7daf-b811-48e7-be33-b9aa4cae0a4e/22-637b21c9e794f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/69909f5c-4b81-4a19-9e8c-2a209755cdf6/22-637b21ca29dda.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 4 நாட்கள் முன்
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)
பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள் News Lankasri
![ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்](https://cdn.ibcstack.com/article/a7017912-bab6-4dec-b4ae-f7cb0dee280f/25-67ad988392b3a-sm.webp)