யாழ். முச்சக்கர வண்டிகள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை (Photos)

Sri Lankan Tamils Jaffna Douglas Devananda Sri Lankan Peoples
By Kajinthan Sep 14, 2023 05:26 AM GMT
Report

யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபுரை விடுத்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதிவுகள் அற்ற முச்சக்கர வண்டிகள்

குறித்த கலந்துரையாடலில் முச்சக்கர வண்டிகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், யாழ். மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுவதுடன் அனேகமான முச்சக்கர வண்டிகள் உரிய பதிவுகளை மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ். முச்சக்கர வண்டிகள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை (Photos) | Jaffna Three Wheeler Registration Issue Douglas

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர், யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் இருந்து குறித்த கூட்டத்துக்கு வருகை தந்தார்களா என கேள்வி எழுப்பிய நிலையில் அதன் தலைவர் பின்வருமாறு கூறினார்.

எமது சங்கத்தில் 1997 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் சுமார் 1300 முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்

யாழில் பெருந்தொகையான தங்க நகைகள் மாயம்

இதன் போது கேள்வி எழுப்பிய அமைச்சர் மீதமுள்ள முச்சக்கர வண்டிகள் ஏன் மீட்டர் பொருத்தவில்லை? அவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இரண்டு மாத கால அவகாசம்

இதன் போது கருத்து தெரிவித்த தலைவர், சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் எமது சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டதாகவும் ஏனைய இடங்கள் தொடர்பில் ஆராய வேண்டும் என குறிப்பிட்டார்.

யாழ். முச்சக்கர வண்டிகள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை (Photos) | Jaffna Three Wheeler Registration Issue Douglas

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டாயம் பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கி உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். இல்லாவிட்டால் சங்கத்திலிருந்து அவர்களது பெயரை நீக்கி விடுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நல்லூரில் தீர்த்தத்திருவிழா (Live)

ஆயிரக்கணக்கானோர் புடைசூழ நல்லூரில் தீர்த்தத்திருவிழா (Live)

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு மாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் சிறி மோகன் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். விடுதியில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: வெளியான திடுக்கிட வைக்கும் காரணம்

யாழ். விடுதியில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: வெளியான திடுக்கிட வைக்கும் காரணம்

வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு வரவுள்ள புதிய தடை

வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு வரவுள்ள புதிய தடை

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியீடு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியீடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US