வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு வரவுள்ள புதிய தடை
நோயாளர்களின் நலன் கருதி வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் ஸ்மாட்
கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுகின்றது.
அந்த வகையில் முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மாட் கையடக்க தொலைபேசி பாவனைக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோரின் கையடக்க தொலைபேசி பாவனைக்கு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடை விதித்துள்ளார்.
தாதியர்களின் கவனக்குறைவு
யாழ். போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 8 வயதுசிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்களின் கவனக் குறைவினாலேயே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
