தையிட்டி விகாரையை பேரபிள்ளைகளுக்காக தான் அமைக்க அனுமதித்தார்கள்!
தமிழர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பல்வேறு தரப்புகளில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்தவகையில், தையிட்டி விகாரையை அகற்ற கோரி ஒரு தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும் இயங்கி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 11ஆம் திகதி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என வலியுறுத்திய போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இப்போராட்டத்தில் அரசியல் தரப்புகளின் பங்கேற்பும் இருந்தது.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தந்திரம் உள்ளதே தவிர தமிழ் மக்களுக்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவில்லை என கூறுகின்றார் எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி.
இது தொடர்பில் அவர் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |