யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை பிரிவு! வெளியான உண்மைகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை பிரிவிற்கு வருகை தருகின்ற நோயாளர்களுக்கு ஒரே நாளிலே அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலைக்கு கண் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் இருந்தும் அதிகளவிலான நோயாளர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.
இதன்போது, வருகை தரும் நோயாளிகளுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து மறுநாளே வீடு திரும்பும் வசதி செய்யப்படுகின்றது.
அத்தோடு, தூர இடங்களில் இருந்து வருகை தரும் நோயாளர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது.
இவ்வாறு வருகை தரும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நேரடியாக அந்த இடத்திற்கு சென்று கள ஆய்வு செய்தது ஐபிசி தமிழ்.
அதில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
