நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்: இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை
எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றைய தினம் (29.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினரால் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்,
"எமது சம்பள முரண்பாட்டு பிரச்சினை தொடர்பாக நீண்ட காலமாக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை முழுமையாக தீர்க்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதன்காரணமாக, நாங்கள் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறோம். எனவே, நாங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அதேவேளை, மாத்தறையிலும் (Matara) வலய ரீதியாகவும் இந்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
மேலும், அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு தராவிடன் நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்.
அதுமாத்திரமன்றி, தொடர்ந்து வந்த எல்லா அரசாங்கமும் நமது பிரச்சினையை கண்டும் காணாமல் விடுவது எமக்கு வருத்தம் அளிக்கிறது.
ஆகையால், எமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை பெற்று தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |