யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு விழா
யாழ்ப்பாணம் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிறுவப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கல்லூரி தின விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று (01.10.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்துள்ளார்.
நூற்றாண்டு விழா
அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து நூறு ஆண்டுகளை வெளிப்படுத்தும்
வகையில் நூறு நிறைகுடங்கள் கொடிகள் ஆலவட்டத்துடன் பண்பாட்டு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரதி லக்ஷ்மி மண்டபத்தில் நூற்றாண்டு விழா ஆரம்பமானதுடன் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக கலாசாலையின் ஓய்வுநிலை பிரதி அதிபரான பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு எழுதிய கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய சிறப்பு ஆய்வான "வடக்கின் ஆசிரியர் கலாசாலை" எனும் நூலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலுக்கான கருத்துரையினை கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான சரா.புவனேஸ்வரன் நிகழ்த்தினார். கலாசாலை கீதத்துடன் விழா நிறைவுபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

7 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் புகலிடக்கோரிக்கையாளருக்கு 10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம் News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
