படையினரிடம் கையளிக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டும்: யாழில் போராட்டம்(Photos)
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ். நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(01.10.2023) இப் போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சர்வதேச சிறுவர் தினமான நேற்று கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச நடவடிக்கை
இதன் போது பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் போயுள்ள எமது சிறுவர்களை எம்மிடமே ஒப்படைப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் பங்குகொண்ட மக்கள் கேட்டுள்ளனர்.

மேலும், ''எமது பிள்ளைகளைக் காணவில்லை என கடந்த பத்து வருடத்திற்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம்.
ஆனால் இதுவரையில் இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என கடந்த 14 வருடங்களாக கோருகிறோம்.
எனவே இனியும் தாமதிக்காது சர்வதேசம் காத்திரமான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்'' என தெரிவித்துள்ளனர்.







உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam