இனங்களுக்கிடையில் சமாதான வாழ்வு சிர்குலைய இடமளியோம்: தம்பகல்ல வனரத்ன தேரர்
சமூக சகவாழ்வுக்கு குந்தகம் விளைவித்து அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் விசம சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என ஏறாவூர் புன்னைக்குடா புண்யராம விஹாராதிபதி தம்பகல்ல வனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் இன்று(01.10.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தம்பகல்ல வனரத்ன தேரர்
சமூக நல்லுறவு
''இந்த மாவட்டத்தில் இன சமூக ஐக்கியம் முக்கியமானது. அதனைச் சீர்குலைக்கு எவருக்கும் நாம் இடமளிக்க முடியாது. நாம் ஒவ்வொரு சமூகத்தாரும் எங்களுக்கிடையில் பரஸ்பர அன்பு புரிதலோடு வாழ்ந்தால் எந்த தீய சக்தியும் எமக்கிடையில் புகுந்து பிளவுகளை ஏற்படுத்த முடியாது.
இலங்கையின் எப்பாகத்தில் வாழ்கின்ற எந்த சமூகத்தினரும் இன, மத. மொழி பிரதேச வேறுபாடுகளின்றி வந்து செல்லக் கூடிய ஒரேயொரு தலமாக இந்த புன்னைக்குடா புண்யராம விஹாரையை ஸ்தாபித்துள்ளேன்.
நான் சமாதான சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கும் அதேபோன்று இந்துக்களின் ஆலயங்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் சென்றிருக்கின்றேன்.
இவையனைத்தும் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கிடையிலும் நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்ற நன்நோக்கில்தான் செய்துவருகிறேன்.
இங்கு எல்லா சமூகங்களையும் சேர்ந்த குழந்தைகள் சமாதானமாக ஒன்று கூடி கலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
இதுபோன்று இன சமூக ஐக்கியம் இனி எதிர்காலத்திலும் தொடர பெரியவர்கள் வழிவகை செய்ய வேண்டும்.
அத்தகைய நோக்கத்திற்காக பாடுபடும் மாவட்ட சர்வமதப் பேரவையின் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி.” என தெரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |