இந்தியாவில் கிடைத்த இலங்கை தமிழரின் எலும்புக்கூடு
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் நேற்றையதினம் (11.06.2023) சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று இந்திய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நபர் சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக ஆந்திர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம்
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த அருணாசலம் சிவராசா என்பவரின் கடவுச்சீட்டும், இந்தியாவின் காசி கோயிலுக்குச் சென்றதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த எலும்புக்கூடு அவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஆந்திர பொலிஸார் இலங்கைக்கு தகவல் அளித்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |