தையிட்டி - திஸ்ஸ விகாரைக்குள் ஊடுருவ முயற்சி! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
வலிகாமம் வடக்கு - தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்று மாறு கோரி முன்வெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு அங்கமாக நேற்று (01.08.2023) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, திஸ்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பெரும்பான்மையினத்தைச் சேர்த்தவர்கள் சென்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் விகாரைக்குள் செல்ல முற்பட்டுள்ளனர்.
இருப்பினும் போராட்க்காரர்களை வழிமறித்த பொலிஸார், அவர்களை விகாரைக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்திய காரணத்தினால் இரு தப்பினர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த மே 3ஆம் திகதியிலிருந்து குறித்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |