யாழில் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பாரதிபுரம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் பிரபு (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி திடீர் உடல் சுகயீனம் காரணமாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அன்றைய தினமே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam