யாழில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவனுக்கு நேர்ந்த கதி!
யாழில் மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(29.4.2026) இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.
குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான நிலையில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.